பிணை காலம் முடிந்து திரும்பவும் சிறைக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே மயக்கம் வருகிறதாம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்க்கு.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி சிறைக்கு சென்ற கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது பிணையில் விடுதலையானார்.
பொலிஸ் விசாரணை மற்றும் திகார் சிறை வாழ்க்கையை நினைத்தாலே உள்ளூர பயம் வருகிறதாம். இது குறித்து ஸ்ரீசாந்த் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாவது, எங்களுக்கு ஸ்ரீசாந்த் அவனது வலி, குழப்பம் மற்றும் விசனம் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும்.
வீட்டில் இருக்கும் நேரங்களில் கூட யாருடனும் பேசுவதில்லை. யாருடனும் ஒட்டாமல் எப்போதும் செய்தி சேனல்களை பார்த்தவாறே பயத்துடன் அமர்ந்திருக்கிறான் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஒரு சிறைப்பறவை என்ற பிதற்றலில் இருந்தும், தன் மீது படிந்த கறையிலிருந்தும் ஸ்ரீசாந்த் வெளியில் வர வேண்டும் எனவும், அதன் பிறகு நிறைய புனிதப்பயணம் செய்ய ஸ்ரீசாந்த் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்தோடு மீண்டும் சிறைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என நினைத்தாலே ஸ்ரீசாந்த் பயந்து நடுங்குவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !