ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக 'போகோஹாரம்' என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி பொது மக்களை கொன்று குவிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஷம்பாரா மாகாணத்தில் உள்ள கிஷாரா என்ற மலை கிராமத்துக்குள் மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கியுடன் 150 தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கு வீடு வீடாக சென்று பொது மக்களை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே ராணுவமும், போலீசாரும் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் கிராம மக்கள் 48 பேர் பலியாகினர். அவர்களில் அந்த கிராம தலைவரும், அவரது உதவியாளரும் அடங்குவர்.
துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள் கிராம மக்களின் வீடுகளுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனால் பல வீடுகள் எரிந்து சாம்பலானது. தீவிரவாதிகள் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் இந்த கிராமத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !