தலைவா ஆகஸ்டு மாதம் தான் ரிலீஸ் என்றாலும், திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் இப்போதே வெளியாக துவங்கிவிட்டன கோடம்பாக்கத்தில். ஆஸ்திரேலியாவில் ‘நடனமே!’ என தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெங்கட்(விஜய்), இந்தியாவிற்கு வந்து எதிர்பாராத விதமாக சில பிரச்சனைகளில் சிக்கி பெரிய ஆளாகிவிடுவது டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் வெங்கட்டை ஏமாற்றி இந்தியாவிற்கு அழைத்துவர அனுப்பப்பட்டவர்தானாம், எல்லா காட்சிகளிலும் சைலண்டாக வெங்கட்டுக்கு பின்புறத்தில் நிற்கும் பூர்ணி(அமலாபால்). விஜய்யை ஏமாற்றும்போது வழக்கம்போல அமலாபால் காதலில் விழுந்துவிடுகிறாராம்.
இப்படி விஜய்யை ஏமாற்றுவது, காதலிப்பது என படத்தில் அமலாபால் பல லூட்டிகள் அடித்தாலும், கேமரா ஓடாத நேரங்களில் விஜய்யிடம் அமலாபால் எது கேட்டாலும் “ என்னம்மா. சொல்லும்மா. ஆமாம்மா” என கனிவாக பேசுவாறாம் விஜய்.
இப்படி ஒரு நடிகருடன் நடித்ததை நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைந்துகொள்ளும் அமலாபாலை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று. தலைவா திரைப்படத்தில் அமலாபால் சொந்த குரலிலேயே பேசியுள்ளாராம். டப்பிங்கின் கடைசி நாளில் முதல்முறையாக சொந்தக் குரலில் பேசுவது குறித்து மிகவும் நெகிழ்ந்துபோனாராம் அமலாபால்.
அமலா பால் முதன்முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அவர் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். தமிழ் படத்திற்கு அவர் டப்பிங் பேசியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான தலைவா பட பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தலைவா?
தொடர்புடைய செய்தி
தொடர்புடைய செய்தி
தொடர்புடைய செய்தி
தொடர்புடைய செய்தி
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !