உலகப் புகழ் பெற்ற இயற்பியல் வல்லுனரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிள் 68 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போனது.
1932-ம் ஆண்டு ஐன்ஸ்டைனும் அவரது மனைவி எல்சாவும் கையொப்பமிட்ட இந்த பைபிள், ஹரியட் ஹாமில்டன் என்ற அமெரிக்கருக்கு இருவராலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ஆகும்.
‘இந்த பைபிள் தீர்ந்துப்போகாத ஞானத்தை தர வல்லது’ என்று முன் பக்கத்தில் ஜெர்மானிய மொழியில் ஐன்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து 1930-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அவரது நம்பிக்கையின் அடிப்படையில் ஆனது என கருதப்படுகிறது. 12-வது வயதுக்கு பின்னர் தன்னை எந்த மதத்துடனும் இணைத்து ஐன்ஸ்டைன் அடையாளப்படுத்திக் கொண்டதில்லை.
எனினும், அன்பின் அடையாளமாக அவர் அளித்த பைபிள் அவரது நண்பருக்கு எதிர்பாராத வேளையில் ஓர் பெரிய தொகையை ஈட்டித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !