ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கும் படம் தான் ஜில்லா. துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், இத்தனை நாட்களாக படங்களில் இருந்து தள்ளி இருந்த பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர்.
படத்தில் மோகன் லால் தாதாவாக நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக விஜய் நடிக்கிறார்.
ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதையாம்.
படத்தின் முதல்பாதி காதல், காமெடி என்று கல, கலவென இருக்குமாம். படத்தின் இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும், பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்குமாம்.
ஜில்லாவில் காஜலும் பொலிஸாகத் தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவா படத்திலும் விஜய்க்கு ஜோடியாக வந்த அமலா பால் பொலிஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ளைகேமை:
விஜய் நடிக்கும் 'ஜில்லா’ ஷூட்டிங் போயிருந்தேன். விஜய் வீடு செட் போட்டிருந்தாங்க. அந்த வீட்டில் இருக்கும் ஜன்னல் வழியா ஃப்ளைகேமை உள்ள கொண்டுவந்து கிச்சன், ஹால், பூஜை ரூம்னு எல்லாத்தையும் ஒரே டேக்ல ஷூட் பண்ணிக் காட்டினேன்.விஜய், மோகன்லால் ரெண்டு பேரும் அசந்துட்டாங்க. படத்தோட டைரக்டர் நேசன், 'படத்தோட க்ளைமாக்ஸ்ல உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்’னு கட்டிப்பிடிச்சுட்டார்.
படம் வெற்றி பெறட்டும்
ReplyDelete