நேற்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை.
இது ஒருபுறமிருக்க இன்விடேஷன் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர்.
முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய வீடியோ க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. இதில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகரான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் விஜய்யின் வீடியோ க்ளிப்பிங்ஸ்கள் மட்டும் திட்டமிட்டு புறக்கணிப்பட்டது.
அது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த நடிகர், நடிகைகளுக்கு கூட முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் நடிகரான விஜய்க்கு வி.ஐ.பி இருக்கைகளின் கடைசி வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்ற விஜய் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரைப் பார்த்த பல முண்ணனி நடிகர்கள் அனைவரும் அமைதி காக்க, இளம் நடிகர்கள் மட்டும் அவரை முன் பக்கம் வந்து உட்காருமாறு அழைத்தனர். ஆனால் யாரும் அவர் பக்கத்தில் வரவில்லை.
இருப்பினும் சைகையால் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறினார் விஜய். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரம் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் சென்று விஜய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
பிறகு விழா முடியும் போது விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு தானாகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றாராம் விஜய்.
'விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா':
விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா என்பது உலக அளவில் ட்விட்டரில் டிரென்டாகியுள்ளது. விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் தளபதியை அவ்வப்போது புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதனால் விஜய்யின் பெயர் ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது.தலைவா பிரச்சனைக்கு பிறகு இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொள்வது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் விஜய் நேற்றைய விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா:
விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா என்ற வார்த்தை ட்விட்டரில் டிரென்ட் ஆகியுள்ளது.
வீ லவ் விஜய் அண்ணா:
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீ லவ் விஜய் அண்ணா என்ற வார்த்தை ட்விட்டரில் டிரென்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடை வரிசை:
சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு கடைசி வரிசையில் சீட் கொடுத்தாலும் இன்றைய நாளிதழ்களில் அவரது போட்டோ தான் முன்பக்கத்தில் உள்ளது என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
செல்லப் புள்ள விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா எங்க வீட்டு செல்லப் புள்ள, உன்ன போல யாருமில்ல என்று விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !