இங்கிலாந்தில் 10 நிமிடத்திற்குள் 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுவதால் பகல் வேளையிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் முகப்பு வெளிச்சத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் இன்று காலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
அப்போது திடீரென பனி மூடியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இவ்வாறு 10 நிமிடத்திற்குள் 100 வாகனங்கள் மோதிக் கொண்டதில், 200 பேர் காயமடைந்தனர்.
இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !