
ஜப்பான் நாட்டில் மரண தண்டனை, குற்றவாளியைத் தூக்கில் போடுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. மனித உரிமைக் கழகங்கள் இதுகுறித்து தங்களின் ஆட்சேபணைகளை எழுப்பியுள்ளன. ஆயினும், பொதுமக்களின் ஆதரவு இந்தத் தண்டனைக்கு இருப்பதை கருத்துக் கணிப்புகள் தெளிவு படுத்துகிறது.
ஜப்பான் நாட்டில் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் மூன்று குற்றவாளிகளுக்கும், ஏப்ரல் மாதம் இரண்டு குற்றவாளிகளுக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்னும் 132 கைதிகள் தங்களின் தண்டனைக்காக இங்குள்ள சிறைச்சாலைகளில் காத்திருக்கின்றனர்.
ஜப்பானின் நீதித்துறை, 73 வயதுடைய குற்றவாளி ஒருவருக்கு இன்று தூக்குதண்டனையை நிறைவேற்றியதாக செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் உணவு விடுதி ஒன்றின் முதலாளியைக் கொன்றுவிட்டு அவரிடமிருந்த 4,000 டாலர் மதிப்புள்ள பணத்தைத் திருடிய குற்றத்திற்காக இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தண்டனை இன்று காலை டோக்கியோவில் நிறைவேற்றப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. இது இந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ள 6-வது தூக்குதண்டனை ஆகும். ஜப்பான் அரசு பொதுவாக மரண தண்டனை குறித்த முழு விபரங்களை வெளியிடுவதில்லை. குற்றவாளிகளுக்கும் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நாட்கள் முன்னர்தான் இது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !