உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது.
குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ஒப்படைத்துள்ளார்.
நாரையின் உடலின் மேற்பகுதியில் இலத்திரனியல் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளமையால் இது உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை பரிசோதித்த அதிகாரிகள் நாரையின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவி வெடிக்கக்கூடியதோ அல்லது உளவுபார்க்கும் கருவியோ அல்லவென தெரிவித்துள்ளனர்.
இது பறவைகளின் நடவடிக்கை தொடர்பில் அவதானிக்கும் 'டிரக்கர்' கருவியொன்றென தெரிவித்துள்ளனர். இதேபோன்ற பல சம்பவங்கள் பல நாடுகளில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.
சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் உளவுபார்த்தாகக் கூறப்படும் கழுகுகள், புறாக்கள் என பல பறவைகள் உடலில் இலத்திரனியல் உபகரணங்களுடன் பிடிக்கப்பட்டிருந்தன.
மேலும் இஸ்ரேல் இம்மாதிரியான உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !