சீனாவில் கிணற்றில் தவறி விழுந்த பெண் ஒருவர் 15 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பம் ஒன்று நடைபெற்றுள்ளது
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜோங்ஃபெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சு சிசியூ.
38 வயதான இவர் 12 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் கடந்த 1ம் திகதி தவறி விழுந்துள்ளார். அந்த கிணற்றைச் சுற்றி உயரமான சோளப் பயிர்கள் இருந்ததால் இவர் விழுந்து தவித்தது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் சூவை காணாமல் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஒரு வழியாக அவர் கிணற்றுக்குள் விழுந்து 15 நாட்கள் கழித்து கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
உடனே இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அவர் கிணற்றுக்குள் விழுந்த சோளத்தை சாப்பிட்டு, மழை நீரை குடித்து உயிர் வாழ்ந்துள்ளார்.
அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அவரால் வாயைத் திறந்து பேசவோ, சாப்பிடவோ முடியவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Chinese woman survives for 15 days after falling down abandoned well
Su Qixiu lived on raw corn cobs and rainwater until a villager discovered her
A Chinese woman has been found alive after becoming trapped at the bottom of an abandoned well for 15 days.
Su Qixiu, 38, lived off raw corn cobs and rainwater, the Chinese state news agency Xinhua reported.
She fell down the concealed well near her village in the northern province of Henan after she went out foraging for herbs and could not climb out as the walls were too slippery and steep, the report said.
Su was discovered by a villager who was harvesting corn on Monday and then rescued by firefighters, Xinhua said.
She was in a stable condition in hospital and recovering, the agency said.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !