இந்தியாவில் தினமும் 4,700க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
World Vision India என்ற தன்னார்வ நிறுவனமே இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த நிறுவனம், ஒரு நாட்டில் மக்கள் மருத்துவத்துக்காக செய்யும் செலவு, அவர்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதிகள், அவர்களின் வாழ்வியல் எதிர்பார்ப்பு, இனப்பெருக்க விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டு உலகளவில் ஆய்வு நடத்தியது.
இந்த அறிக்கையின் முடிவில், குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில் 176 நாடுகளில், இந்தியா 135 இடத்தில் உள்ளது.
இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு, 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர்.
இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவிகிதத்தை மருத்துவத்துக்காக செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
1,000 பெண்களில் 86 பேர் வரை, 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இந்தியா முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 4700 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி பெரிய அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உயிரிழப்பு: பெற்றோர்கள் அதிர்ச்சி
மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் அமைந்துள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையான பிசி ராய் மருத்துவமனையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு மருத்துவமனையின் கவனக்குறைவு காரணமா அல்லது நவீன வசதிகள் ஏதும் குறைபாடாக உள்ளது என்பது குறித்து ஆராய இரண்டு நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனை மட்டுமே காரணம் அல்ல என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
ஆனால் மற்ற மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்படுகிற மிக மோசமான இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகளால் இந்த இறப்பு நிகழ்ந்துள்ளது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இதே போன்று கடந்த மே மாதமும் 16 குழந்தைகளும், கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைவால் இறந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !