ஈராக்கில் ஜனாதிபதியாக இருந்த சதாம்உசேன் தூக்கிலிட்ட பிறகு கடந்த 2008–ம் ஆண்டு முதல் வன்முறை சம்பவங்கள் தொடங்கின. 2011–ம் ஆண்டில் அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்பட்டது.
அதிலிருந்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
தற்போது அரசு அதிகாரத்தில் மெஜாரிட்டியாக உள்ள ஷியா பிரிவினர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மைனாரிட்டியாக வாழும் சன்னி பிரிவினர் மீது தொடர்ந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொடர் கார் குண்டு தாக்குதல்கள் பெருமளவில் நடந்தது. அதில் 1057 பேர் பலியாகினர். 2,326 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தகவலை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கடந்த ஜூலை மாதத்தில்தான் அதிக அளவில் உயிர் பலி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !