விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புார் அளித்துள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் சென்ற கவிதா என்ற பெண், பொலிஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கவிதா கூறியுள்ளதாவது:
நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். அதன் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டெல்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது.
அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாளவன் சமீபத்தில்தான் 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பெற்றோர்களும், கட்சித்தொண்டர்களும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தினர். அதை மறுத்து வந்த நிலையில் தற்போது கோவையில் இருந்து அவர் மீது திருமண மோசடி புகார் கிளம்பியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !