வடகிழக்கு நைஜீரியாவின் கிராமத்துக்குள் புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் கிராமத்தினர் 44 பேரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிவரும் போகோ ஹரம் தீவிரவாதிகள், அவ்வபோது கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம், போர்னோ மாகாணத்தில் உள்ள டும்பா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்தது. டும்பா கிராமம் மலைப் பகுதியில் உள்ளது. அங்குள்ள தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் இச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமைதான் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
இந்த தாக்குதலுக்கு, இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி கிராம மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அதிகாலை வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலம் தும்பா கிராமத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தீவிரவாதிகள் அப்பாவி கிராம மக்கள் 44 பேரின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொன்றுக் குவித்தனர்.
துப்பாக்கிகளால் சுட்டால், பொலிசாரின் காதுகளில் கேட்டுவிடும் என்று நினைத்தே, மக்களின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர் என்று உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் பலரது கண்கள் தோண்டப்பட்டு பிணங்கள் கொடூரமான முறையில் காட்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்ற இடம் மிகவும் குக்கிராமம் என்பதாலும், அப்பகுதிக்குச் செல்லும் தொலைபேசி இணைப்புகள் சில நாட்களாக துண்டிக்கப் பட்டிருந்ததாலும் இச்சம்பவம் பற்றிய தகவல் தாமதமாக வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !