அதிக அளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடக்கும் நாடாக இந்தியா இருப்பதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு மற்றும் பிரசவகால மரணங்கள் தொடர்பாக இந்திய மாநிலங்களவையில் நேற்று எழுப்பிய கேள்விக்கு, அவர் எழுத்து பூர்வமாக அளித்த பதிலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
இந்தியாவில் 2008-09 ஆண்டில் 11.06 இலட்சம் கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பதிவுத்துறை தலைவர் தகவலின்படி, பிரசவகால மரணத்தில் 8 சதவீத மரணத்திற்கு கருக்கலைப்பு காரணமாக இருந்துள்ளது.
2008-ல் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்தில் 13 சதவீத தாய்மார்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
ஒரு இலட்சம் பாதுகாப்பற்ற கருக்கக்கலைப்பில் 200 மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதிக அளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடக்கும் இடமாக இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது அந்த அறிக்கையில் இல்லை. போதுமான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்கி சுகாதார வசதிகளுடன் பாதுகாப்பான கருக்கலைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !