கொழும்பு - பம்பலபிட்டி - டிக்மன் வீதியில் ஊடகவியலாளர் வீட்டில் இடம்பெற்றது வெறும் கொள்ளைச் சம்பவம் மாத்திரமே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார்.
சிலர் இதனை வேறு வழியில் திசை திருப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பம்பலபிட்டி சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இன்று (24) பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொள்ளையர்கள் முச்சக்கர வண்டியொன்றில் வந்திருப்பதாகவும் அவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் அவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படும் எனவும் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார்.
தாக்குதலில் நான்கு பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் அதில் இருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொள்ளையர்கள் நால்வரும் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஊடகவியலாளரை கடத்தும் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் கொள்ளையர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் கடந்த சில தினங்களாகவே ஊடகவியலாளர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !