திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்க நாணயம், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
இந்த காணிக்கை பொருட்கள் தினம் தினம் எண்ணப்படும். ஒரு மாதம் உண்டியல் மூலம் கிடைக்கும் தங்கம் சேர்க்கப்பட்டு தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்படும். அந்த வகையில் கடந்த ஜுன் மாதம் மட்டும் 123 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்து உள்ளது. கடந்த 2 நாட்களாக விடுமுறை எனபதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் உண்டியல் மூலம் ரூ.3.19 கோடி (இந்திய ரூபா) வசூலானது. ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் இன்று நடந்தது. இதையொட்டி காலை சுப்பரபாத சேவை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளும் இரத்து செய்யப்பட்டது. காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆனி வார ஆஸ்தான பூஜை நடந்தது. முக்கிய பிரமுகர் மட்டும் வி.ஐ.பி. தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மாலை புஷ்ப பல்லக்கு மலைச்சாமி வீதி உலா நடக்கிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !