யாழ். குடாநாட்டில் தனது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையையும் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த இளைஞனையும் பொலிஸார் கைதுசெய்து நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என யாழ். பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம். முகமட் ஜிப்ரி தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
துன்னாலை கிழக்குப் பிரதேசத்தில் இருந்து சிறுமியொருவரைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த இளைஞன் ஒருவரைக் கைதுசெய்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் நல்லூர்ப் பகுதியில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும் குறித்த சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரான தந்தையைக் கைது செய்து யாழ். நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் படுத்தியதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு தீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !