
தொழிற்சாலைகள், மிகப்பெரிய வர்த்தக வளாகங்கள், பண்ணை வீடுகள் போன்ற இடங்களில் எளிதாக செல்லும் வகையிலான இந்த ஸ்கூட்டர்களை டொயோட்டா வடிவமைத்து தற்போது ஜப்பானிலுள்ள சுகுபா என்ற இடத்தில் வைத்து சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை நிலைகளில் வெற்றி பெற்றால் அடுத்து உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்ல டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
விங்லெட் முதல் தரிசனம்:
2008ம் ஆண்டு இந்த புதிய தனிநபர் பயன்பாட்டு ஸ்கூட்டரை டொயோட்டா பார்வைக்கு அறிமுகம் செய்தது.
சோதனை ஆரம்பம்:
ஜப்பானிலுள்ள சுகுபா என்ற இடத்தில் உள்ள மிகப்பெரிய வளாகங்களில் வைத்து தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ரோபோ:
இதனை தனி நபர்களுக்கான உதவி செய்யும் ரோபோவாக டொயோட்டா தெரிவிக்கிறது.
பாதுகாப்பு:
இந்த புதிய ஸ்கூட்டர் மிகவும் பாதுகாப்பான, குதூகலமூட்டும் தனிநபர் போக்குவரத்து சாதனமாக இருக்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.
எளிதான போக்குவரத்து:
எதிர்வரும் காலத்தில் எளிதான போக்குவரத்து சாதனமாக இதனை சந்தைப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
சார்ஜ்:
எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் விங்லெட்டை ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். ஒரு சார்ஜுக்கு 9.6 கிமீ தூரம் செல்ல முடியும்.
அடுத்த கட்டம்:
அடுத்த ஆண்டு முதல் விங்லெட்டின் செயல்பாடுகள், வசதிகள் மற்றும் பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பு போன்றவற்றை ஆய்வு செய்யப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.
செக்வே ஸ்கூட்டர்:
டொயோட்டாவின் விங்லெட் கான்செப்ட் நிலையில் இருக்கும் ஸ்கூட்டர், தசாவதாரத்தில் கமல் பயன்படுத்திய செக்வே ஸ்கூட்டர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.5 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !