ரஷ்யாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தபட்சம் 18 பேர் மரணமடைந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய தலைநகரான மொஸ்கோவின் புறநகர்ப் பகுதியிலேயே நேற்று சனிக்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ் வண்டியொன்றும் லொறியொன்றும் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விரு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாளை திங்கட்கிழமை துக்கதினம் அனுஷ்டிக்கப்படுமென்று நகர அதிகாரிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !