அவுஸ்திரேலிய உல்லாசப் பயணியின் பையிலிருந்த சுமார் 46 ஆயிரம் ரூபா பணம் இனம் தெரியாதவர்களால் திருடப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய பிரஜையான ரய்டின்கல் வோல்பத்தி என்பவரே இம்முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
தானும் தன் குடும்பத்தினரும் உணவு விடுதி ஒன்றில் தங்கி தேநீர் அருந்தி விட்டு வெளியேறியபோது பிரயாணப் பையிலிருந்த 46 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் திருட்டுப் போயிருப்பதை அறிந்ததாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !