யாழில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு வெளியீடு செய்த அச்சக உரிமையாளர், குற்றப்புலனாய்வுப் பரிவினரால் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஆறுகால்மடத்தடியில் போலியான முறையில் கள்ள நோட்டுக்கள் அச்சட்ட அச்சக உரிமையாளர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுப் பொலிசார் இவரை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவர் தனது அச்சகத்தில் கள்ள நோட்டுக்களை அச்சிடுவதற்காக பல இயந்திரங்களை தென்பகுதியிலிருந்து கொண்டு வந்துள்ளதாகவும் அத்தோடு போலி ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டதாக தெரியவருகின்றது.
இந்த போலி ரூபா நோட்டுக்கள் அச்சிட்ட அச்சக உரிமையாளருக்கும், யாழ் செயலகத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் அவனது நண்பனும் தொடர்புபட்டிருப்பதாகவும் இருவரும் சேர்ந்தே இந்த நடவடிக்கைகளை மேற் கொண்டனர் என்றும் தெரியவருகின்றது.
வங்கி ஊழியரின் உதவியுடன் இவர் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு வெளியீடு செய்து வந்துள்ளதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !