சிரியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் அசாத் ஆதரவுப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
வட மேற்கு சிரியாவில் உள்ள பேடா பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்தே அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு கொல்லப்பட்டோரில் ஆண்கள் மூவரும், பெண்கள் நால்வரும், 6 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்கு வெளியே இருந்த ஆண்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்றுள்ள ஆயுததாரிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றுள்ளனர்.
அவர்கள் வீடு எரிக்கப்பட்டுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. புனித ரமலான் மாதத்திலும் இத்தகைய செயல்களில் அசாத் ஆதரவுப் படைகள் ஈடுபட்டுள்ளமைக்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைதியான ஆர்ப்பாட்டமாக இடம்பெற்று தற்போது சிவில் யுத்தமாக மாறியுள்ள சிரிய உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல மாதங்களாக தொடரும் இம்மோதல்களால் பல்லாயிரக் கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !