அப்பிளின் தயாரிப்பில் உருவான ஐபோன்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றது. அப்பிள் தனது ஐபோன் வரிசையின் அடுத்த வெளியீடான ஐபோன் 5 எஸ் இனை செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.இது தொடர்பில் ஜேர்மன் நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதுதொடர்பில் அப்பிள் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. வெவ்வேறு அளவிலான திரைகளைக் கொண்ட இரு ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஐபோன்5 கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதேபோல் ஐபோன் 5எஸ் உம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
எனினும் விலை அதிகம் என்பதால் அனைவராலும் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு அப்பிள் நிறுவனமானது குறைந்த விலை உடைய ஐபோன்களை தயார் செய்வதில் முனைப்புக்காட்டி வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 18ம் திகதி இந்த ஐபோன்கள் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 GB சேமிப்புக் கொள்ளளவு உடைய ஐபோன் ஒன்றின் பெறுமதியானது 349 டொலர்கள் வரையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !