திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் பயணம் செய்த கார் மீது ரூபாய் நோட்டுக்களை தூவி வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான தேனி மாவட்ட நிதியளிப்பு கூட்டம் நேற்று (23.07.2013) தேனியில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து கார் மூலம் தேனிக்கு வந்தார். அப்போது தேனி மாவட்ட எல்லையான தெக்கானூரணி அருகே மாவட்ட செயலாளர் மூக்கையா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து தேனி நகருக்குள் வரும்வரை ஆங்காங்கே கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். இதில் தேனி புதூர் பிரிவு அருகே மு.க.ஸ்டாலின் வரும்போது தேவதானப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஸ்டாலின்ரகு என்பவர் தான் வைத்திருந்த 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை கார் மீது தூவி வரவேற்றார். அப்போது உடனிருந்த திமுகவினர் உரத்த குரல் எழுப்பி உற்சாகமாக கைத்தட்டியதுடன், அந்த ரூபாய் நோட்டுக்களை சேகரித்தனர். தொண்டர்களை சைகையால் அமைதிப்படுத்திய ஸ்டாலின், பின்னர் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்த மாவட்ட இளைஞரணியின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் மாலையில் நடந்த நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !