காங்கோ நாட்டில் இடம்பெற்ற தாக்குதலில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதோடு, 12 இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
ஆபிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக எம்.23 என்ற தீவிரவாத அமைப்பினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே தீவிரவாதிளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தும் சமரசம் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து காங்கோ நாட்டின் காமா பகுதியின் வடக்கில் உள்ள பல கிராமங்களை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எனவே, அவற்றை மீட்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டது. அதை தொடர்ந்து இராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
அப்போது வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டன.
மேலும், சண்டையில் 12 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தகவலை காங்கோ அரசு வெளியிட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !