அயர்லாந்தில் நிபந்தனைகளுடன் கூடிய கருக்கலைப்பு சட்டத்துக்கு பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருவுற்றிருக்கும் சமயத்தில் தாயின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படும் போது, கருக்கலைப்பு செய்து கொள்ள இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
கருக்கலைப்பு சட்டம் குறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பல மணி நேரமாக பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன. பின்னர் அதற்கு ஆதரவாக 127 பேர் வாக்களித்தனர்.
இதன்படி சில குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். கடந்த ஆண்டு அயர்லந்தில், இந்திய பெண் மருத்துவர் சவிதா கருவுற்றிருந்த போது, அவருக்கு கருச்சிதைவு ஆனது. இதனைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய அந்நாட்டு சட்டத்தை காரணம் காட்டி மருத்துவர்கள் மறுத்தனர்.
இதனால் கடுமையான தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். நாடு முழுவதிலும் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கும் ஆதரவுகளுக்கும் இடையே கருக்கலைப்பு சட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !