சினிமாவில் ஜொலிக்க அழகுதான் பெரிய சொத்து என்று கூறுகிறார் ஹன்சிகா. நான் சினிமாவுக்குள் வரும்போதெல்லாம் எனது நடிப்பு மீது எனக்கும் சரி, என்னை நடிக்க வைத்தவர்களுக்கும் சரி பெரிய நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால், நான் நல்ல அழகாக இருந்ததால் மட்டுமே சினிமாவில் சான்ஸ் கிடைத்தது. அதன்பிறகுதான் மெல்ல மெல்ல நடிப்பை கற்றுக்கொண்டேன் என்கிறார் ஹன்சிகா.
ஆனால், சமீபகாலமாக இரவு பகல் என்று இடைவிடாமல் நடிப்பதால் அழகு பராமரிப்பில் அவரால் முன்பு மாதிரி போதிய கவனம் செலுத்த முடிவதில்லையாம். அதனால், ஸ்பாட்டில் ஒரு அரை மணி நேரம் கேப் கிடைத்தாலும் கண்களை மூடி தூங்கி ஓய்வெடுக்கும் ஹன்சிகா, சில நாட்களில் பியூட்டிசியன்களை ஸ்பாட்டுக்கே வரவைத்து கேரவனுக்குள் அமர்ந்து அழகு சிகிச்சை செய்து கொள்கிறாராம்.
மேலும், உடல் பொலிவு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக அவ்வப்போது ஆயுர்வேத மசாஜ்களை கடைபிடிக்கவும் தவறுவதில்லையாம். குறிப்பாக, தனது வெள்ளை தோலில் ஒரு சிறிய கரும்புள்ளி விழுந்தாலும் அதிர்ச்சியடைந்து விடும் ஹன்சிகா, தனது மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.
ஹன்சிகாவின் ஜொலிக்கும் அழகுக்கு அவ்வப்போது ஆயுர்வேத மசாஜ்!
Written By TamilDiscovery on Friday, July 12, 2013 | 10:04 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !