யாழ். மாவட்டத்தில் மக்கள் வெளிநாடு செல்லும் நோக்குடன் போலி முகவர்களிடம் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து ஏமாந்து போயுள்ளனர். அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் அதிகளவில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் .பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம். முகமட் ஜிப்ரி தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ். மாவட்டத்தில் தற்பொழுது வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புக்காக மக்கள் வெளிநாடு செல்வது இயல்பான ஒருவிடயம். ஆனால் அதற்காக போலி முகவர்களை நம்பி இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகின்றார்கள்.
இது தொடர்பான முறைப்பாடுகள் எம்மிடம் அதிகமாகக் கிடைக்கின்றன. நாம் விசாரணைகளை மேற்கொள்ளும் போது பணத்தினைப் பெற்றுக்கொண்ட முகவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடியும் தலை மறைவாகியுமுள்ளனர். இதனால் பணத்தினைக் கொடுத்தவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டும். அத்துடன் முகவர்களிடம் முழுப் பணத்தினையும் கொடுத்து ஏமாற்றமடைய வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !