இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற எகிப்தின் ஜனாதிபதி முகமது மொர்ஸிக்கு எதிரான போராட்டதின் போது, பெண் நிருபர் ஒருவர் ஐந்து நபர்களால் நடு வீதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் தற்போது கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர செயல் மாபெரும் எழுச்சி போராட்டத்தில் நடந்திருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் ஜனாதிபதி முகமது மொர்ஸி பதவியை விட்டு விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் மாபெரும் தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. தலைநகரின் மைய பகுதியான தாஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி பேரணிகள் ஞாயிற்றுகிழமை புறப்பட்டது. இந்த நிலையில் பேரணியின்போது டட்ச் நாட்டை சேர்ந்த பெண் நிருபர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் இலட்சக்கணக்கானோர் சூழ்ந்த முக்கிய போராட்ட பகுதியில் அன்றிரவு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர்.
தற்போது அந்த பெண் பலத்த காயமுற்று அதன் விளைவாக அறுவை சிகிச்சைகளை பெற்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் எகிப்து மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் பாலியில் தொந்தரவிற்கு எதிரான அமைப்பு குரல் கொடுத்துள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் ஐந்து நபர்களால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த ஞாயிறு இரவு மட்டும் 44 பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
மேலும் ஒரு தரப்பு போராட்டத்தின் எழுச்சியை குறைக்க மற்றும் பெண்களின் பங்கேற்பை தடுக்க இத்தகைய இறக்கமற்ற அநாகரீகம் செயல்களை நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !