அவருடன் மேலும் ஆறு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஆர்.எஸ்.மங்கலம் காந்தி வீதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக மகளிர் அணி ஒன்றிய செயலாளாக இருக்கிறார்.
தனது வீட்டில் முத்துலெட்சுமி சித்த மருத்துவமனை என்ற பெயரில் ஒன்ற வைத்துள்ளார். இங்கு சிகிச்சையை விட கருக்கலைப்புதான் அதிகம் நடந்து வந்துள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கருக்கலைப்பு செய்ய வருவோர் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து இதை விபச்சார விடுதியாக மாற்றி விட்டார் முனியம்மாள்.
மேலும் இவருக்கு ஜீவிதா மேரி என்ற பெண் தரகர்கள் போல செயல்பட்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளனர். மருத்துவமனையிலேயே அவர்கள் இந்த அக்கிரமத்தை செய்து வந்தனர். இதுகுறித்துப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், மருத்துவமனைக்குள் 28 வயதான ஐஸ்வர்யா என்ற பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதைக் கண்டு அவரை கையும் களவுமாக பொலிஸார் பிடித்தனர்.
இவர் கேரளாவைச் சேர்ந்த அழகியாம். இதையடுத்து முனியம்மாள், ஜீவிதா மேரி, ஐஸ்வர்யா உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !