Headlines News :
Home » » பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படுகிறது யாழில்!

பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படுகிறது யாழில்!

Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 1:32 AM

யாழ்.மத்திய பேருந்து நிலைய சூழலில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிரமாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரப் பகுதிக்கு வரும் பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் துர்நாற்றம் வீசும் விதமாக பல இடங்களில் பலர் சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர்.

இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ். பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை இம்மாதம் முதல் எடுக்கப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிமாராய்ச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template