தற்போது 30 வயதாகும் இவர், ஜாக்சன் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக சிறார்களை பயன்படுத்தினார் என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளார். இதே ராப்சன் முன்பு அதாவது 2005ம் ஆண்டு ஜாக்சன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது தன்னை ஜாக்சன் ஒன்றுமே செய்யலையே என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ராப்சன், ஜாக்சன் குறித்துக் கூறுகையில், சிறார்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்த என்ன வழியெல்லாம் உண்டோ அதையெல்லாம் அவர் செய்வார். அதே போல தப்பிக்கவும் பல வழிகளை அவர் கையாண்டார்.
மேலும் படுக்கை அறையில் அவர் அலாரம் வைத்திருந்தார். யாராவது வருவது போல தெரிந்தால் அவர் தப்பி விடுவார்.
நான் 1990ம் ஆண்டு முதல் ஏழு வருட காலத்திற்கு அவரிடம் சிக்கி படாதபாடு பட்டேன். தனது படுக்கை அறைக்கு வெளியே தொந்தரவு செய்ய வேண்டாம் (don´t disturb) என்று போர்டை போட்டு விட்டால், ஜாக்சன் யாரோ ஒரு சிறுவனுடன் உள்ளே இருக்கிறார் என்று அர்த்தம். அவரது அறையில் அடிக்கடி போர்டு தொங்கும்.
நானும் ஜாக்சனும் பல நேரங்களில் ஒரே படுக்கையில் படுத்துள்ளோம். என்னை தனியாக விட மாட்டார் என்று கூறியுள்ளார் ராப்சன்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !