என் முன்னிலையில் ஊமைக்கூட பேசுவது தனக்கு கிடைத்த பாக்கியமென்று மஹர
நீதவான் தர்ஷிகா விமலசிறி நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை
தெரிவித்தார்.
பெண்களை விபசாரத்திற்கு ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில்
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நீதவானினால் கேட்கப்பட்ட குறுக்கு
கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டவரை அவரது சட்டத்தரணி
நீதிமன்றத்தில் ஊமைப்போல நடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிரகாரம்
நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் தான் ஒரு ஊமைப்போலவே நடித்துள்ளார். அந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் சந்தேக நபரிடம் நீதவான் திடீரென கேள்வியொன்றை கேட்டுள்ளார்.
தான் ஊமையாக நடித்துக்கொண்டிருப்பதனை மறந்த பிரதிவாதி நீதவானின் கேள்விக்கு உடனடியாகவே பதிலளித்துவிட்டார். இதனையடுத்தே, என் முன்னிலையில் ஊமைக்கூட பேசுவது தனக்கு கிடைத்த
பாக்கியமென்று தெரிவித்த நீதவான் சந்தேகநபரை கடுமையாக எச்சரித்து பிணையில்
விடுதலைச்செய்தார். வேபடவில் வசிக்கின்ற விமுக்தி நதிஷான் என்பவரே இவ்வாறு ஊமைப்போல நடித்து நீதிமன்றத்தை திசைதிருப்புவதற்கு முயற்சித்துள்ளார். பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கிரிபத்கொடை
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 25 ஆயிரம் ரூபா ரொக்க
பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் நீதிமன்றத்தினால் நேற்று
விடுதலை செய்யப்பட்டார்.
சந்தேகநபரை கடுமையாக எச்சரித்த நீதவான் இந்த முறைப்பாட்டை நவம்பர் 10 ஆம் திகதி மீண்டும் விசாரிப்பதற்கு தீர்மானித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !