கைப்பேசி உலகில் மக்களின் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள அப்பிளின் iPhone ஆனது அண்மையில் iPhone 5 என்ற தனது புதிய உற்பத்தியை அறிமுகப்படுத்தியிருந்தது.
இக்கைப்பேசியும் சிறந்த வரவேற்பைப் பெறவே iPhone 5S தயாரிப்பில் மும்முரமாக அப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளது.
தற்போது இப்புதிய கைப்பேசி தொடர்பான சில படங்களும் அவற்றின் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் 4 அங்குல அளவு மற்றும் 1136 x 640 Pixel Resolution உடைய IGZO தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது iOS 7 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றது.
மேலும் பிரதான நினைவகமாக GB RAM, 12 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா போன்றனவும் உள்ளடக்கியதாக வெளிவரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Home »
Technology
» வெளியானது அப்பிள் iPhone 5S தொடர்பான தகவல்கள்!
வெளியானது அப்பிள் iPhone 5S தொடர்பான தகவல்கள்!
Written By TamilDiscovery on Saturday, July 20, 2013 | 11:08 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !