இலங்கையில் தீவிரமாக பரவத் தொடங்கியிருக்கும் எயிட்ஸ் நோய் காரணமாக இந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் படையெடுப்பு என்பன காரணமாக அண்மைக்காலங்களில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் நாட்டில் 16 பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த 6 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 90 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !