மிரிஹான பொலிஸ் பிரிவில், ஆயுர்வேத வைத்திய நிலையம் எனக் கூறி நடத்தப்பட்டு வந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் கைதான 12 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவின் கந்தவத்த வீதியில், நேற்று முன்தினம் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 7 பெண்களை கைது செய்தனர். அத்துடன் பெத்தகான புறக்கோட்டை பிரதேசத்தில் விபச்சார விடுதியொன்றை நடத்திச் சென்ற 4 பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் கைதான இவர்களுடன் ஆண் ஒருவர் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் 12 பேரும் நேற்றையதினம் நுகோடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !