சீனாவின் மேற்கு பகுதியில் இன்று காலை உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 47 பேர் பலியாகியுள்ளதோடு 279 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் உள்ள டிங்சி நகர் அருகே இன்று காலை 7.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 6 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் 47 பேர் பலியாகியுள்ளதாகவும், 279 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் டிங்சி, லோன்கன், டியான்ஷூய் மற்றும் லான்சூ ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளது. மீண்டும் ஒன்றரை மணிநேரம் கழித்து 5.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !