ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டில் பூகம்பமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் புகுஷிமாவில் உள்ள அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு வெடித்து சிதறியது.
இதனால் அதில் இருந்து நச்சு கதிர்வீச்சு வெளிப்பட்டது. அது கடல், குடிநீர், பால், உணவு பொருட்களில் பரவியது. எனவே அப்பகுதியில் இருந்து சுமார் 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
அதை தொடர்ந்து வெடித்து சிதறிய புகுஷிமா அணு உலையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கதிர்வீச்சு கசிவை சீரமைக்கும் பணியும் நடந்தது. எனினும் நேற்று முன்தினம் 3வது அணு உலையில் இருந்து வெளியான நீராவி கண்டு பிடிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது. அணுஉலை வெடித்து கதிர்வீச்சு வெளியானதில் இருந்து அதை சீரமைக்கும் பணியில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உடலில் கதிர்வீச்சு தாக்கம் இருக்கும் என்று உறுதியாக நம்பபடுகிறது
எனவே, அணு உலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு தைராய்டு புற்று நோய் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரமைப்பு பணியில் உள்ள ஊழியர்களின் உடலில் குறைந்தது '100 மில்லி சிவர்ட்ஸ்' அளவில் கதிர்வீச்சு உள்ளது. இதனால் அவர்களுக்கு தைராய்டு புற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !