உத்திர பிரதேசத்தில் காதலை கைவிட மறுத்த தங்கையை அண்ணன் சுட்டுக் கொன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கங்கேரு கிராமத்தை சேர்ந்த சய்மா(வயது 17) என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.
இந்த காதலை கைவிடும்படி சய்மாவின் குடும்பத்தினரும்,அவரது அண்ணனும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதனை சிறிதும் கண்டுகொள்ளாத சய்மா, தன் காதலனுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்.
இதனையடுத்து நேற்று சய்மாவின் சகோதரர் ராசா கான் தன் தங்கையை கண்டித்து திட்டினார். இதில் சய்மாவுமக்கும் கோபம் வந்து பதிலுக்கு பேசவே வாக்குவாதம் முற்றியது. கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ராசா கான், வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து தங்கை சய்மாவை சுட்டுக் கொன்றார். மேலும் இக்கொலையை மறைக்க தன் வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி பிணத்தை ரகசியமாக புதைத்துவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து பொலிசாருக்கு தெரியவரவே, விரைந்து வந்த பொலிசார் மாவட்ட நீதிபதியின் அனுமதியுடன் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தலைமறைவான ராசா கானை பொலிசார் தேடி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !