கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இந்நாடு தொடர்பில் பலர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை .
ஆனால் அங்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமொன்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஆம், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகதளங்களுடன் தொடர்புபட்ட சட்டமே அது.
குறித்த சட்டத்தின் பிரகாரம் சமூகதளங்களில் அந்நாட்டு பாவனையாளர்கள் எவரேனும் மற்றையோருக்கு (நபர் அல்லது நிறுவனங்களுக்கு) பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ, துன்புறுத்தும் வகையிலோ கருத்தை தெரிவிக்கவோ, கமெண்ட் போடவோ கூடாது. அவ்வாறு செய்தார் என முறைப்பாடொன்று கிடைக்கும் பட்சத்தில் நீதிபதியொருவர் அது தொடர்பில் ஆராய்வார்.
சட்டத்தை மீறி குற்றம் இழைத்துள்ளார் என உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படும். தண்டனையாக 37,000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாக அறவிடப்படலாம் அல்லது 3 வருட சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.
இது மட்டுமன்றி கிரெனடாவில் சிறுவர் சம்பந்தப்பட்ட பாலியல் காணொளிகள் அல்லது படங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராகவும் தண்டனை வழங்கும் விதத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்படி குற்றத்துக்கு 111,000 அமெரிக்க டொலர்கள் தண்டப் பணமாக விதிக்கப்படலாம் அல்லது 20 வருட சிறையோ வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !