Headlines News :
Home » » தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தொடர்ந்தும் தடை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தொடர்ந்தும் தடை!

Written By TamilDiscovery on Monday, July 1, 2013 | 5:14 AM

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு அந்த தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் 2010 ஆம் ஆண்டு மே மாதம்; நீட்டித்தது. இந்த தடை நீட்டிப்பு சரி தானா என்பது குறித்து ஆராய்வதற்காக டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்த தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி தடை நீட்டிப்பு சரி தான் என்று 2010ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஒரு ஆண்டுக்கு முன்பே முடிந்ததுடன் தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எலிபி தர்மாராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோர் இன்று திங்கட்கிழமை வழங்கினர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரி தான் என்ற தீர்ப்பாயத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தவறு ஒன்றும் இல்லை.

அதனால், வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template