கொழும்பு, கெத்தாராத பிரதேசத்தில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் பொலிஸ் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த கால்வாயிலுள்ள சகதியை அகற்றியவாறு இவர்கள் தங்களது தேடலை முன்னெடுத்து வருகின்றனர். குற்றச்செயலொன்றுடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டும் முகமாகவே இந்த தேடல் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தேடுதலின் போது கையடக்கத் தொலைபேசியொன்றின் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் தொலைபேசி என சந்தேகிக்கப்படும் கைத்தொலைபேசி ஒன்றை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழங்கிய தகவலுக்கமையவே மேற்படி கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !