லண்டன்: பொதுவாக அழகு என்றாலே முக லட்சணத்திற்கு முன்பாக கூந்தல் தான் நினைவில் வரும். நீளமான முடிகளுக்கு எப்பவுமே மவுசு கொஞ்சம் ஜாஸ்தி தான்.
கவரி மான் மாதிரி, முடி கொட்ட ஆரம்பித்து விட்டது என்றால், ஆண்களாயிருந்தாலும் சரி, பெண்களாயிருந்தாலும் சரி, அடுத்து என்ன எண்ணெய், ஷாம்பூ பயன் படுத்தலாம் என யோசிக்க ஆரம்பித்து விடுவர். பள்ளிக்கு செல்ல, பணிக்குச் செல்ல என நம்மில் பலர் இன்று, காலத்தின் கட்டாயத்தால் முடியை குட்டையாக்க முயற்சி செய்கிறோம். ஆனால், லண்டன் சிறுமி ஒருத்தி மூன்று அடி நீள முடி வளர்த்து சாதனை புரிந்திருக்கிறார்.
உயரமோ 4 அடி:
அதுல முடி 3 அடியா? உக்ரைன் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து, லண்டனில் குடியேறிய தம்பதியரின் மகள் பொடோனா. தற்போது எட்டு வயதாகும் பொடோனாவின் முடியோ 3 அடி.
4 வருட முயற்சி:
நான்கு வயதிலிருந்தே முடி வெட்டுவதை நிறுத்திவிட்ட இவர், தற்போது 3 அடி நீள முடி வளர்த்து சாதனை புரிந்துள்ளார். ஆனால், இவரின் உயரம் 4 அடி மட்டுமே.
பொறுமை தான் ரகசியம்:
இந்த 3 அடி முடியை நன்கு எண்ணெய் வைத்து, ஷாம்பூ போட்டு அலசி பின்னர் நன்கு உலர வைப்பதற்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆவதாக தெரிவிகிறார் இவரது அம்மா.
அத்தனைக்கும் ஆசைப்படு:
வங்கி அதிகாரியாக பணி புரிந்து வரும் இவரது தந்தை மகளின் ஆசைக்கு ஒருபோதும் குறுக்கே நிற்பதில்லையாம். மகள் இன்னும் முடி வளர்க்க ஆசைப் பட்டால் அதற்குரிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளாராம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !