இந்தியா, கேரளா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழைக்காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதுடன் 1,829 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை 93 செ.மீ. மழைவீழ்ச்சி கேரளாவில் பதிவாகி உள்ளதாகவும் இது வழக்கமான சராசரி 51 செ.மீ. மழையை வீழ்ச்சியைவிட மிகவும் அதிகமானது என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழையின் காரணாமாக கேரளா முழுவதும் 1,829 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 161 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இம் மழைக்காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டை, காசர்கோடு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் தற்போதுதான் இந்த அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 91ஆம் ஆண்டு கேரளாவில் இதேபோல கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மழையின் வேகம் இன்னும் சில தினங்காளில் குறையும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வட இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின்
எண்ணிக்கை 1000 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !