மாத்தறை, தெலிஜ்ஜவில வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து ஒன்பது வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விமானப்படையின் முன்னாள் படைவீரருக்கு 15 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு மாத்தறை மேல் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிபதி பிரியந்த டி சில்வா கடுமையான வேலைகளுடன் கூடிய 15 வருட சிறைத்தண்டனை விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாவை நட்டஈடாகவும், 10 ஆயிரம் ரூபாவை தண்டமாகவும் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டவர், மாத்தறை தெலிஜ்ஜவில வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் மது அருந்திவிட்டு குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்தார்.
Home »
Sri lanka
» பரீட்சை மண்டபத்தில் ஒன்பது வயது சிறுமியை துஷ்பிரயோகம்: முன்னாள் படைவீரருக்கு 15 வருடகால கடூழிய சிறை!
பரீட்சை மண்டபத்தில் ஒன்பது வயது சிறுமியை துஷ்பிரயோகம்: முன்னாள் படைவீரருக்கு 15 வருடகால கடூழிய சிறை!
Written By TamilDiscovery on Thursday, June 27, 2013 | 9:52 PM
Related articles
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !