தலிபான்களுக்கு பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெரிவிததுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானில் தொலைகாட்சி சனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டுமானால் தலிபான்கள் பாகிஸ்தானில் அலுவலகம் அமைத்து செயல்படுவதை அனுமதிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தையும், ஜனநாயக நடைமுறைகளையும் அவர்கள் பின்பற்றாவிட்டால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினர் அலுவலகம் தொடங்குவது தொடர்பாக ஊடகங்கள் காட்டி வரும் விமர்சனம் பாரபட்சமானது.
மேலும் அவர்களுடன் நிபந்தனைகள் அற்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ராணுவமும், அரசியல் கட்சிகளும் பாரபட்சமாக நடந்து கொள்ள கூடாது.
பழங்குடியின மக்களின் நலனுக்காக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இம்ரான்கானின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !