பங்களாதேஷ் விடுதலை போரின் போது, ஏராளமானவர்களை கொன்று குவித்ததாக எதிர்கட்சி எம்..பி., சலாவுதீன் சவுத்திரிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்துள்ளது.
பங்களாதேஷில், கடந்த, 1971ல், பாகிஸ்தான் ராணுவத்தினருடன் ஏற்பட்ட சண்டையின் போது, ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக இந்துக்கள் பலர் பல்வேறு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், இதுவரை ஏழு பேருக்கு, ஆயுள் மற்றும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சண்டையின் போது, ஏராளமான பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்தது, பல வீடுகளை கொளுத்தியது உள்ளிட்ட, 23 குற்றச்சாட்டுகள், பங்களாதேஷ் தேசிய கட்சியின் எம்.பி., சலாவுதீன் மீது சுமத்தப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, சர்வதேச குற்றவியல் நடுவர் மன்றம், சலாவுதீனுக்கு, 65, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் படி, நேற்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை கேட்ட, எதிர்கட்சியான வங்கதேச தேசிய கட்சி தொண்டர்கள், பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
சலாவுதீன் தொகுதியில், வேன் டிரைவர் வாகனத்தோடு கொளுத்தப்பட்டார். இதையடுத்து, சிட்டகாங் பகுதியில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !