Headlines News :
Home » » சிரியா மீது 72 மணித்தியால அதிரடித் தாக்குதல் திட்டம்? அமெரிக்கா!

சிரியா மீது 72 மணித்தியால அதிரடித் தாக்குதல் திட்டம்? அமெரிக்கா!

Written By TamilDiscovery on Sunday, September 8, 2013 | 10:53 AM

சிரியா மீது 3 நாட்கள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த மூன்று நாட்களிலும் அதி தீவிரமான தாக்குதலை சிரியா மீது நடத்த அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றனவாம்.

இந்த செய்தியை லாஸ் ஏஞ்செலஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்:
ஏவுகணைத் தாக்குதலே இதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறதாம். பலமுனைகளிலிருந்து இத்தாக்குதலை நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.

முதல்கட்டமாக 50 இலக்குகள்:
முதலில் 50 இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதல் இலக்குகளை சேர்க்குமாறு வெள்ளை மாளிகை நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

அதிரடித்தாக்குதல்:
சிரியப் படையினர் எந்தவிதத்திலும் சுதாரிக்காத வகையில் அதிரடியாக தாக்குதலை நடத்தி முடிக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாம்.

ஏவுகணை அழிப்பு விமானங்கள்:
அமெரிக்க விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்களை பெருமளவில் பயன்படுத்தவும், ஐந்து அமெரிக்க ஏவுகணை அழிப்பு விமானங்களும் பயன்படுத்தப்படவுள்ளனவாம்.

குரூஸ் ஏவுகணைகள்:
குரூஸ் ஏவுகணைகள், வானிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் பெருமளவில் பயன்படுத்தவுள்ளதாம் அமெரிக்கா.

நிமிட்ஸ் போர்க்கப்பல்:
செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் நிமிட்ஸ் போர்க் கப்பல் முக்கியத் தாக்குதலை நிகழ்த்தவுள்ளதாக தெரிகிறது.

3 நாள் தாக்குதல்:
72 மணி நேரத்தில் அதாவது 3 நாட்களுக்குள் அத்தனை தாக்குதலையும் முடித்து சிரியாவை அதிபர் அஸ்ஸாத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் வகையில் தாக்குதல் இருக்கும் என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சிரியா நாட்டின் மீது மூன்று நாட்கள் தீவிர தாக்குதல்:

சிரியா நாட்டின் மீது மூன்று நாட்கள் தீவிர தாக்குதலை நடத்த, அமெரிக்க ராணுவ தலைமையகமான, பென்டகன் திட்டமிட்டுள்ளது.

சிரியா நாட்டில், ஜனாதிபதி பஷர் -அல்- ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின.

ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன.

இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர்; 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். ரசாயன ஆயுதம்:சிரியா நாட்டுக்கு ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகின்றன.

இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் திகதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்துள்ளனர்.

இன்னும் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. "சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல், 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அமெரிக்க வீரர்களின் காலடி அந் நாட்டில் படக்கூடாது´ என, அமெரிக்க செனட் குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நடந்த, "ஜி 20´ உச்சி மாநாட்டில், "சிரியா மீதான தாக்குதல் தவிர்க்க முடியாது,´´ என, ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், சிரியா மீதான போர் உறுதியாகி விட்டது. இதையடுத்து, தாக்குதலுக்குரிய திட்டங்களை அமெரிக்க தலைமையகமான பென்டகன் தயாரித்து வருகிறது. இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

சிரியா மீதான யுத்தம் துவங்கியதும், மூன்று நாட்களுக்கு தீவிர தாக்குதல் நடத்தப்படும். முதல் கட்டமாக விமானம் மூலம் குண்டுகள் போடப்படும். இரண்டாவது கட்டமாக, மத்திய தரைக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ள ஐந்து, அமெரிக்க போர்க் கப்பல்கள் மூலம், ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும். சிரியாவில், 50 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். தேவைக்கேற்ப இந்த இலக்கு கூடவோ, குறையவோ செய்யலாம். 72 மணி நேர அதிரடி தாக்குதலில், சிரியா படைகள் ஒடுக்கப்படும்.

எனவே, விமானப் படைகளை குறைந்த அளவில் பயன்படுத்த ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு ராணுவ அதிகாரிகள் கூறினர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template