நான் உன் முறை மாமன்தானே என்று சொல்லிச் சொல்லியே பலமுறை பெண் போலீஸ்காரரிடம் உறவு வைத்து விட்டு இப்போது திருமணம் செய்யக் கோரியபோது மறுத்த சப் இன்ஸ்பெக்டர் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் தலைமைக் காவலராக இருக்கிறார். இவரது மகள் ராஜேஸ்வரி. இவர், வில்லியனூர் அனைத்து மகளி்ர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். சண்முகம் என்ற சப் இன்ஸ்பெக்டர் மீது அவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரின்பேரில் போலீஸார் சண்முகத்தைக் கைது செய்துள்ளனர். ராஜேஸ்வரி தான் கொடுத்த புகாரில், புதுவை டி.என். பாளையத்தை சேர்ந்த எனது அத்தை மகனான சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமும், நானும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்தோம். இதற்கிடையே தனிமையில் சந்தித்து பேசும்போது திருமணம் செய்து கொள்வதாக என்னுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். ஒரு சில நேரங்களில் எனது வீட்டின் மொட்டை மாடிக்கே என்னை அழைத்து சென்று சண்முகம் இன்பம் அனுபவித்தார்.
நான் பல முறை மறுத்தபோது நான் முறை மாமன் தானே என்றும், திருமணம் செய்து கொள்ள போகிறவர்தானே என்றும் கூறியதால் நான் அனுமதித்தேன். இந்த நிலையில் சண்முகத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியபோது அவரது தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்த பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினார்.
இதனால் அவர் சொன்னதை நம்பினேன். அதன்பிறகு 2 வருடங்களாகவும் திருமணம் செய்து கொள்வது குறித்து எந்த பதிலும் கூறவில்லை. இதையடுத்து நான் திருமணம் செய்து கொள்ளுமாறு சண்முகத்திடம் மீண்டும் வலியுறுத்தியபோது எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம். நான் ஏமாற்ற மாட்டேன், கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி கூறியதையடுத்து நான் நம்பி அவருடன் தொடர்ந்து பழகி வந்தேன்.
கடந்த ஜூலை மாதம் சண்முகத்திடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினேன். அதற்கு அவர் உன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்தும் இதுநாள் வரை ஒருமுறை கூட கர்ப்பம் தரிக்கவில்லை. எனவே நீ மலடி, அதனால் உன்னை நான் எப்படி திருமணம் செய்ய முடியும்? என்று என்னை மிகவும் கேவலமாகவும், அசிங்கமாகவும் திட்டினார்.
எங்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும் எனது பெற்றோர் சண்முகத்திடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிவதால் என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று எனது பெற்றோரை மிரட்டினார்.
இதற்கிடையே கடந்த 2-ந்தேதி அன்று சண்முகம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்தார். இதனை அறிந்த நான் இதுபற்றி கேட்க சண்முகம் பணி புரியும் போலீஸ் நிலையத்துக்கு சென்று பார்த்தேன். அப்போது அவர் இல்லை. இதையடுத்து நான் சண்முகம் நிச்சயம் செய்த பெண்ணை சந்தித்து முறையிட அந்த பெண் வீட்டுக்கு சென்றேன். அங்கு அந்த பெண்ணின் தந்தை என்னை தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அங்கிருந்து அனுப்பி விட்டார்.
இதைத்தொடர்ந்து நான் எனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது சண்முகம் மற்றும் அவரது அக்காள், அக்காளின் கணவர், அவருடைய அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் ஒரு காரில் என்னை பின்தொடர்ந்து வந்தனர். பின்னர் திடீரென சண்முகம் காரைவிட்டு இறங்கி எங்கும் என் மீது புகார் கொடுக்க கூடாது என்றும் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். நான் உயிருக்கு பயந்து கொண்டு அருகில் உள்ள தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். இதனை பார்த்ததும் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.
என்னை சண்முகம் குடும்பத்தினர் மிரட்டியதை தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு அளக்கும்படி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என் தாயை வரவழைத்து அவருடன் என்னை அனுப்பி வைத்தனர். எனவே இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தும், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியும், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்ய துணிந்த சண்முகம் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து எஸ்.ஐ. சண்முகம் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !